Categories
மாநில செய்திகள்

BREAKING : கிண்டி மருத்துவமனை….. “முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றம்”….!!!!

கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் கிண்டியில் கொரோனா தொற்றுக்கு என்று புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அந்த மருத்துவமனை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

இதனால் கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும், கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையில் இது இந்தியாவில் முதல் முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |