ஜூலை 3 வது வாரத்தில் CUET தேர்வுகள் நடைபெறும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இனி முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று யுஜிசி தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த CUET தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் மத்திய பல்கலைக்கழகம் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.