Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: ஆடம்பர பொருட்கள் இறக்குமதி குறித்து…. வெளியான திடீர் முடிவு….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயம் அற்ற தன்மை என்று பல பிரச்சினைகளை அந்தநாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியம் அற்ற மற்றும் ஆடம்பரம் பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து ஷபாஸ் ஷெ ரீப் கூறியதாவது, “தேவையற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விலைமதிபற்ற அன்னிய செலாவணி செலவிடப்படாது” என தெரிவித்தார்.

Categories

Tech |