கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த தேவிகுளத்தில் வியாழன் அன்று கேப் ரோடு எனப்படும் மலைப்பாதை பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த நௌஷாத் (38) மற்றும் நைசா (8 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டனர்.
காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் ஒன்பது பயணிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். கார் விபத்தில் சிக்கியவர்கள் மூணாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.