ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐ.நா உதவி குழுவின் பெண் பணியாளர்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்களை கல்வி கற்க மற்றும் வேலைக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இது மட்டுமல்லாமல் நாட்டில் பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் அனைவரும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய ஐக்கிய நாடுகளுக்கான உதவிக்குழுவில் பணிபுரியக்கூடிய பெண் பணியாளர்கள் அனைவரும் இனிமேல் கட்டாயம் ஹிஜாப் அணிந்து தான் வர வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்.