Categories
மாநில செய்திகள்

கடற்கரை TO செங்கல்பட்டு இடையிலான குளிர்சாதன மின்சார ரயில்… குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் முழுதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இப்போது அதிகளவு அதனை பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் மின்சார ரயில்களிலும், பயணிகளுக்கு பல வசதிகளை செய்துகொடுக்க ரயில்வே வாரியம் முன்வந்துள்ளது. இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையில் குளிர்சாதன வசதியுடன் மின்சார ரயில் தேவை என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட சூழ்நிலையில் கடற்கரை-செங்கல்பட்டு இடையில் குளிர்சாதன வசதி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரயில்வேயிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது.

இந்த மார்க்கத்தில் அதிகளவு பயணிகள் மின்சார ரயிலை பயன்படுத்துகின்றனர். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் போகக்கூடியவர்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் இந்த வேளையில் குளிர்சாதன மின்சார ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பதாக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இதற்கு தேவைப்படுவதால் அதை தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான செயல்திட்டம், இயக்கம் பற்றி ஆலோசித்து முடிவுவெடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரயில்வே அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

மாநில அரசின் தேவை தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே விரைவில் கடிதம் அனுப்ப முடிவு செய்து உள்ளது. ஏ.சி. மின்சார ரயில் தேவையின் அவசியத்தையும், அதற்குரிய செலவு மற்றும் திட்டமதிப்பீட்டை ஆய்வு மேற்கொள்ளவும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தப்படுகிறது. இது பற்றி முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநாதன் கூறியதவாது, கடற்கரை-செங்கல்பட்டு இடையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க வேண்டுமென்று மாநில அரசு கோரியுள்ளது. அந்த வகையில் இதற்குரிய அனுமதிபெற ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட இருக்கிறது.

ஆகவே அனுமதி கிடைத்ததும் இப்பணி தொடங்கும் என்று கூறினார். சென்ற சில வருடங்களாக ஏ.சி. மின்சார ரயில் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து ஏ.சி. மின்சார ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மும்பையில் சென்ற சில மாதங்களுக்கு முன் புறநகர் மின்சார வழித்தடத்தில் ஏ.சி. ரயில் பெட்டி பயன்படுத்தப்படுகிறது. மும்பையை அடுத்து சென்னையிலும் ஏ.சி. மின்சார ரயில் சேவை வெற்றிகரமாக அமையும். காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் முதற்கட்டமாக இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |