Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் அமைச்சர்களை விரட்டுகிறாரா?….. உண்மை நிலவரம் என்ன…. அமைச்சர் பிடிஆர் ஓபன் டாக்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பை ஏற்றபோது கொரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டத்தில் இருந்து காப்பாத்த  ரொக்கப் பணமாக ரூ.4000 வழங்கினார். அதுமட்டுமில்லாமல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண நகர் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், மற்றவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.ஆனால் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றையும் செய்யவில்லை என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் மிரட்டுகிறார் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, திராவிட மாடல் ஆட்சி என்பதை கொண்டுவந்து, மனிதநேயமிக்க ஆட்சி என்பதை இந்தியாவிற்கே முன் உதாரணமாக விளங்குவது இந்த ஆட்சியின் முதல் வெற்றி ஆகும். வாயில் யார் வேண்டுமானாலும் வடை சுடலாம் என்று பிரதமர் மோடி மறைமுகமாக பேசிய எங்கள் தலைவர் ஸ்டாலின் எங்களை தினமும் விரட்டுகிறார். தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாதவற்றை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்றும் அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து “நான் கூட கேட்பேன் டெல்லியில் ஒருவர் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார், கருப்பு பணம் கொண்டு வரப்படும் என்றார், ஜிஎஸ்டி கொண்டுவந்தால் பொருளாதாரம் முன்னேறும் என்று சொன்னார் எதுவும் நடக்கவில்லை. நீங்கள் ஏன் எங்களை மிரட்டுகிறார்கள் என்று முதவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அது அவர் இது நான்’ சொன்னதை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பார். அதனை முடித்து கொடுப்பதற்கு தேவை செயல்திறன், அவர்களுக்கு மனித நேயம் இல்லை நமக்கு இருக்கிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் சொல்வதற்கும் செய்வதற்கும் முடியவில்லை. நாம் செய்கிறோம். இதனை ஓர் ஆண்டில் நிரூபித்துள்ளோம் என்று அவர் கூறினார். மேலும் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து ஸ்டாலின் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் கன்னியாகுமரியில் இருந்தபோது அடுத்த நாள் இரவு பூட்ஸை மாட்டிக்கொண்டு சென்னை மழை வெள்ளத்தில் நிற்கிறார். மறுநாள் குறைந்தால் கவச உடை அணிந்து வார்டுக்குள் செல்கிறார். அதன்பிறகு பழங்குடியின மக்கள் வீட்டில் உணவருந்துகிறார். மற்றொரு நாள் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கூட்டம் போடுகிறார். அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்துப் போக வேண்டிய கட்டாயம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இரவு என்று பாராமல் போன் போட்டு அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஸ்டாலின் பேசி பல்வேறு விஷயங்களை கேட்டறிந்த நடவடிக்கை எடுக்கச்சொல்லி அறிவுறுத்துவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இவரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Categories

Tech |