Categories
உலக செய்திகள்

தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக…. டாட்டூ குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்…..!!!

ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டார்கள்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கலை ஆயுத திருவிழாவில் உக்ரைன் மக்கள், டேட்டூ மூலமாக தங்கள் தாய்நாட்டின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விழாவானது கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு தொழிற்சாலையில் நடந்திருக்கிறது.

இதுகுறித்து 27 வயதுடைய டாட்டூ கலைஞர் தெரிவித்ததாவது, தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் உக்ரைன் மக்களிடமிருந்து டாட்டூ குத்திக்கொள்ள கோரி க்கைகள் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த போர் மக்களை மாற்றி விட்டது. முதல்தடவையாக டாட்டூ குத்துபவர்களும் தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையாக தான் குத்திக் கொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |