Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகமே உஷார்…! 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ,ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |