இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை சியோமி ரெட்மி நிறுவனம் அறிமுக படுத்துவதாக அறிவித்துள்ளது .
சமீபத்தில் ரெட்மி நிறுவனம் புதிதாக ரேடார் மற்றும் பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் படுத்தியது . இதனை தொடர்ந்து இந்தியாவிலும் புதிய சாதனங்களை அறிமுகபடுத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது .
இதற்கு முன்னதாக ரெட்மி லேப்டாப் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது. ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் B.I.S சான்றிதழ் மற்றும் HMSHO1GE எனும் மாடல் நம்பரை கொண்டிருக்கிறது .
இதற்கு முன்னாள் வெளியான ரெட்மி வாட்ச் மாடலில் 1.78 இன்ச் AMOLED வசதி கொண்ட தொடுதிரை ஸ்கிரீன் மற்றும் அதிக வாட்ச் ஃபேஸ் வடிவமைப்புகள், குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100,1 GB ரேம், MIUI சார்ந்த வியர் O.S வழங்கப்பட்டுள்ளது .இதனை கொண்டு 40 செயலிகளை பயன்படுத்தும் வசதி மற்றும் 4G வேலிடிட்டி காலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் பயன்படுத்தலாம் .