Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர் குற்ற செயல்… கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ்…!!!

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியில் வசித்து வருபவர் வேல்ராஜ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்.
இவருடைய மனைவி நாகலட்சுமி. கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று வேல்ராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 39 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகப்பட்டினம் செக்கடி தெருவில் வசித்த சேகர் என்ற கொறசேகர்(50) என்பவரை கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கொறசேகர் மீது வெளிப்பாளையம், நாகை, நாகூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 25-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் பொருட்டு  நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இப்பரிந்துரையின் பேரில் கொறசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொறசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர் மூலம் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |