Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி… வேலைநிறுத்தப் போராட்டம்…!!!

பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து காந்தல் பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தன. அதில் 30 க்கு அதிகமான பயணிகள் பயணித்தார்கள். அந்த பேருந்தில் ஓட்டுநர் மூர்த்தி(56) என்பவர் ஓட்டினார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருந்த சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஓட்டுநர் மூர்த்தியை கல்லால் தாக்கி உள்ளார்கள். இதனால் படுகாயம் அடைந்த மூர்த்தி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓட்டுநரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று காலை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அப்பொழுது நடவடிக்கை எடுக்க கோரி முழக்கங்களை எழுப்பினார்கள். இதன் காரணமாக ஊட்டியிலிருந்து காந்தல், சிங்கர் போஸ்ட், தலைகுந்தா உட்பட பல்வேறு வழிப்பாதையில் நகரப் பேருந்துகள் செயல்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கொடுத்தனர். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |