எந்திரன் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் சங்கர். இவர் சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு ஒன்றிற்காக சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை இயக்குனர் மல்லிகார்ஜுனா சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் ஆஜராவதை செய்தியாளர்கள் தெரிந்து கொண்ட நிலையில், அவர் பின் வழியாக காரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் இது தொடர்பாக இயக்குனர் சங்கரை அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.