தமிழ் திரையுலகில் வெற்றிவேல், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிகிலா விமல். இவர் சமீபத்தில் மலையாளத்தில் நடித்து இருக்கும் ஜோ ஜோ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பசுவை வெட்டக் கூடாது என்பது தற்போது வந்திருக்கும் நடைமுறை. அது ஒரு பிரச்சனை இல்லை. விலங்குகளை விடக் கூடாது என்ற எந்த விலங்கையும் வெட்டக் கூடாது.
அதனை தொடந்து பசுவுக்கு என்று தனித்துவமாக எதுவுமில்லை, வெட்டலாம் என்றால் அனைத்தையும் வெட்டலாம். பசுவை மட்டும் வெட்டக்கூடாது, கோழியை விடலாம் என்றால் அது எந்த வகையில் நியாயம். கோழி பறவையாக இருந்தாலும் அது ஒரு உயிர்தானே. பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா?. அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் கோழி, மீன் போன்றவற்றை சாப்பிடமல் முழுமையாக மாற வேண்டும். மேலும் நான் அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் சாப்பிடக் கூடாது என்றால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.