Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில்” நடைபெறும் வைகாசி திருவிழா…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

காமாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழப்பனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

இந்நிலையில்  திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன்   எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து எழுத்து அம்மனை தரிசனம்  செய்தனர் . அதன் பின்னர் தங்களது பெயரில்  அர்ச்சனை செய்துள்ளனர்.

Categories

Tech |