2 பேருந்துகள் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று சங்கிரி கோழிப்பண்ணை சாலை பகுதியில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் அவ்வழியாக வந்த தனியார் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி கல்லூரி பேருந்தின் மீது மோதி 2 பேருந்தும் அருகில் மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காயம் அடைந்த 25 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட ஆகிய 3 பேரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.