Categories
மாநில செய்திகள்

“பருவகால நோய்”…. மக்களே அச்சம் வேண்டாம்…. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் புதிய விளக்கம்…..!!!!

சென்னை கிழக்கு தாம்பரத்திலுள்ள கிருத்துவக் கல்லூரியில் முதுநிலை இதழியல் துறை சார்பாக பிக்சலத்தான் (Pixelthon) தேசிய அளவிலான புகைப்பட கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியில் கொரோனா தொற்றின்போது முதுநிலை தமிழக புகைப்படம் பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றது. இப்புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

இதையடுத்து சுகாதாரத்துறை செயளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இப்போதுவரை இலவசமாக தடுப்பூசி செலுத்தியும் 44 லட்சம் நபர்கள் முதல் தவணை போடவில்லை. அதேபோன்று 1.25 கோடி பேர் இதுவரையிலும் 2ஆம் தவனை தடுப்பூசி செலுத்தபடவில்லை. இவற்றில் முக்கியமாக 11.68 லட்சம் 60 வயதிற்ககு மேற்பட்ட முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரதுறை பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தபடாமல் இருப்பதால் அனைவரும் உடனே முன்வந்து  தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதனிடையில் மத்திய அரசு தனியார் மருத்துவமனையில் பூஸ்டர்  தடுப்பூசிகள் செலுத்திகொள்ளலாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தினாலும், அவர்களுக்கு இலவசமாக செலுத்தகூடிய தடுப்பூசிகளே வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதனை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். மழை மற்றும் வெயில் ஆகிய பருவ காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுபடுத்த சுகாதாரதுறை முழுமையாக தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |