தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை, அரியலூர், திருச்சி, கரூர், குமரி, நெல்லை,திண்டுக்கல் மட்டும் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.