Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடல் நண்பனாக பணியாற்ற 19 பேர் தேர்வு….. “அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பணி நியமன ஆணை வழங்கினார்”….!!!!

கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022- 23 வருடத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனவ கிராமங்களில் கடல் நண்பன் பணியாளராக பணியாற்றுவதற்கு ஒப்பந்தம் மூலம் வருவாய் கிராமங்களை சேர்ந்த 19 பேர் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கும் மீனவர்களுக்கும் இடையே பாலமாக இருந்து மீனவர்களின் கடல் மீன் வளம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளக்கூடிய முதல் நபராக மீனவ கிராமங்களில் செயல்படுவார்கள்.

மேலும் மீனவர்களிடையே வானிலை முன்னறிவிப்பு செய்திகள், கடல் சீற்றங்கள் குறித்த தகவல்கள், தினசரி மீன்பிடிப்பு என மீனர்வகளுக்கு சார்ந்த தகவல்களை சேகரித்து அவர்களுக்கு கூறும் பணியை செய்வார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் துறை அலுவலகத்தில் சாகர் மித்ரா பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியானது நேற்று நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமை தாங்க உதவி இயக்குனர் விஜயராகவன் வரவேற்க மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

Categories

Tech |