அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதி மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நகராட்சி தலைவர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் டவுன் வடக்கு ராஜவீதி, கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போன்றவற்றை அகற்றியுள்ளனர். மேலும் இதுபோன்று மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கும் அனைத்து பேனர்களும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.