Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த விசைப்படகுகளின் கழிவுகள்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளின் கழிவுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்நிலையில் உரிமையாளர்கள் அந்த விசைப்படகுகளை கடலிலிருந்து வெளியே எடுத்து உதிரி பாகங்களை அகற்றினர். அதன்பின் காசிமேடு பழைய யார்டு பகுதியில் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் விசைப்படகுகளின் கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து தீ காற்றின் வேகத்தில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணார்பேட்டை துறைமுகம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. எபினேசர், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |