ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்து விடுவார். இந்நிலையில் இவர் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சென்ற வெள்ளிக்கிழமை டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகின்றது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சென்ற வருடம் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு தற்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் ரைட்ஸ் அதிக தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. டப்பிங் ரைட்ஸ் மட்டுமே ரூபாய் 13 கோடிக்கு விற்கப்பட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.