கடகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும்.
வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிர்வாகத்தை சீர் படுத்திக் கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். இதனால் உங்களின் மதிப்பு கூடும். இறை வழிபாட்டினால் அனைத்து காரியத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
குடும்பத்தில் பிரச்சனையில்லாத நிம்மதியான வாழ்க்கை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இன்றைய நாள் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.