துலாம் ராசி அன்பர்களே…!
இன்று வாக்குறுதி மாறாமல் சிலர் உங்களிடம் செயல்படலாம்.
இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவு சுமாராகவே இருக்கும். பணியாளர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கும். பெண்கள் உங்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் காட்டுவது வேண்டாம். அவர்களிடம் எந்த ஒரு ரகசியங்களையும் கூற வேண்டாம்.
இன்று நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டும். இன்று உங்கள் உடல் நிலை சோர்வடையும்.
இன்று உங்களுக்கு தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முன்கோபத்தை நீங்கள் தவிர்ப்பது நல்லது. உங்களை உதாசீனம் படுத்தியவர்கள் இன்று உங்களிடமே வந்து சேர்வார்கள். மனதை நீங்கள் திடமாக வைத்துக் கொள்வது நல்லது.
பிறர் செய்யும் குற்றங்களை நீங்கள் கண்டுபிடித்து கூறுவதால் உங்களுக்கு அவப் பெயர் வர வாய்ப்பு உள்ளது.
உங்களின் நேர்மையான குணம் வெளிவருவதால் நீங்கள் இன்று சில பிரச்சினைகள் கூட சந்திக்க நேரிடும்.
கணவன் மனைவிக்கிடையே இன்று அன்பு கூடும். இன்று நீங்கள் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று காதல் கைகூடும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து நீங்கள் பாடங்களை படிப்பார்கள். உயர்கல்விக்காக தயாராகும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உள்ளது.
அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது நல்லது.
இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன் பெற்றுக்கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.