மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள்.
பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நீங்கள் கேட்டு நடப்பீர்கள். இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்கள் குழந்தைகள் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அரசியல்வாதிகள் மக்களின் வாக்குரிமையை நிறைவேற்றினால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் சற்று விழிப்புடன் கவனமாக பேச வேண்டும்.
இன்று உங்களுக்கு நிதானம் இருந்தால் எந்த ஒரு காரியமும் கைகூடும். யாரைப் பற்றியும் நீங்கள் விமர்சனம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. கேலி கிண்டல் பேச்சுகளை கூட தவிர்ப்பது நல்லது. பேச்சை கட்டுப்படுத்தினால் பாதி பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் ஆடம்பர செலவை குறைத்துக் கொண்டாலே உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் இன்று உங்களுக்கு உள்ளது. ஆனால் நீங்கள் அதை குறைத்து கொண்டால் சேமிப்பு கைகூடும். நடந்தாலே உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வராது. இன்று நீங்கள் குடும்பத் தேவைகளையும் ஓரளவு சரி செய்து கொள்வீர்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று உங்களுக்கு காதல் கசக்கும் நாளாக தான் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். படிப்பைத் தவிர மற்ற எண்ணங்களுக்கு நீங்கள் செல்லவே கூடாது. முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் ஊதா நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமானதிசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.