குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலர் ஒருவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 23 பேரை கைது செய்திருக்கிறார்கள்.பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இதுவரை பிடிபடவில்லை. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடலூர் , விழுப்புரம் , பாண்டிச்சேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
இதற்கிடையில் இந்த குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஒரு இடைத்தரகராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் ஈடுபட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.அந்த போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த போலீஸ்காரர் குடும்பத்தினர் 4 பேருக்கு குரூப்-2 A தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும் அந்த சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியது. அதனையும் கைப்பற்றிய சிபிசிஐடி போலீசாருர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் நேற்று இரவு ஒருவர் பிடிப்படு இருக்கிறார். அவரிடம் தற்போது சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அவரும் இடைத் தரகராக செயல்பட்டு இருப்பாரா ? என்ற கோணத்தில் CBICID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.