Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை படுத்துறாங்க…. முதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்…. 2-வது மனைவியுடன் கணவர் கைது….!!

2-வது மனைவியுடன் இணைந்து முதல் மனைவியை கொடுமை படுத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ள நிலையில் பிரியா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கண்ணன் 2-வது மனைவியுடன் இணைந்து கொண்டு முத்துலட்சுமியை அடித்து கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனால் முத்துலட்சுமி திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மேலும் இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை கொடுமைபடுத்திய கண்ணன் மற்றும் பிரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |