ஆந்திராவில் கால்நடைகளுக்கு 135 கோடி ரூபாயில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பார்கள். கால்நடைகளுக்கு நோய் அல்லது விபத்துக்களால் ஏற்படும் காயம் உள்ளிட்ட ஏதாவது பிரச்சனை இருந்தால் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories