நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலமாக மலிவு விலையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றது. மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமான ஒன்று. இப்படி மிக முக்கியமான உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை மீண்டும் எளிதில் வாங்கி விட முடியும். உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய நகல் அட்டை எளிதாக உருவாக்க முடியும். ஆன்லைனில் அல்லது நேரடியாக அதை எப்படி பெறுவது என்பது பற்றி இதில் பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறை:
ரேஷன் கார்டு நகல் அட்டையை உருவாக்கமுதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் முதல் பக்கத்தில் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இணைப்பு ஒன்று இருக்கும். அதனை கிளிக் செய்தால் ஆன்லைன் படிவம் வரும். அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேரடியாகப் பெறும் வழிமுறை:
ஆஃப் லைன் மூலமாக நகல் ரேஷன் அட்டையை உருவாக்க நீங்கள் மாவட்ட உணவு மற்றும் விநியோக கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். உங்களது குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் தேவை. அங்கு நகல் ரேஷன் கார்டு படிவத்தை வாங்கி அதனை பூர்த்தி செய்த பிறகு அதனுடன் அபராத கட்டணம் இரண்டு ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும். நகல் ரேஷன் கார்டு வாங்குவதற்கு ரேஷன் கார்டு எண்,அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாள சான்று ஆகியவை தேவைப்படும்.
விதிமுறைகளில் மாற்றம்:
நாடு முழுவதும் ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு பல்வேறு விதிமுறைகளை தொடர்ந்து மாற்றம் செய்து வருகின்றது.அதில் குறிப்பாக தகுதியானவர்களுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு தற்போது உறுதியாக உள்ளது.ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் ஆனபிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டு வருகின்றன .
ரேஷன் கார்டு ரத்து:
நாட்டின் தகுதி உடையவர்கள் மட்டுமே ரேஷன் உதவிகளை பெற வேண்டும் என்பதற்காக பயனர்களின் வருமானம் மற்றும் பயன்பாடு உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு தகுதியற்றவர்கள் அனைவரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மோசடிகளை தடுக்க நடவடிக்கை:
நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகக் குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன.எடை இயந்திரங்களில் மோசடி செய்வதாக புகார்கள் அதிகமாக வந்துள்ளதால் மின்னணு இயந்திரங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் மோசடிகளை குறைக்க முடியும்.
ஆதார் இணைப்பு:
நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து பயணிகளும் தங்களது ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்பது கட்டாயம். இதற்கான கால அவகாசம் சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி வருகின்ற ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை அனைவரும் இணைத்திருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.