பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10 ஆவது தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 11வது தவணைக்கான பணத்தை பிரதமர் நரேந்திர மோடி எப்போது வெளியிடுவார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்..
இந்த நிதியானது மே-31 ஆம் தேதி பிரதமர் மீண்டும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பத்தாவது தவணையானது மே 15ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் மே 15 ஆம் தேதியை தாண்டி விட்டதால் 11- வது தவணை விரைவாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.