கரீபியன் கடலில் ரிக்டர் அளவில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கரீபியன் கடலில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீபியன் கடலின் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் இந்த நீலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் சுனாமி அபாயம் நீங்கியதாகவும், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சர்வதேச சுனாமி ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.