Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட…. குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தக்காளி விலை 100 ரூபாய் கடந்த விற்பனை செய்யப்படுவதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பண்ணைப் பசுமை கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் அதாவது 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |