ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே ருத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே இந்த முறை 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இதில் அணியின் தோல்விக்கு காரணம் உள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல்-ல் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் உண்மை என ருத்துராஜ் கூறியுள்ளார்.
கேப்டன் மாற்றம்,முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றது போன்றவை தான் நாங்கள் பிளே ஆப் விட்டு வெளியேற காரணம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, எங்களுடைய திறமைக்கு ஏற்ப நாங்கள் இந்த தொடரில் விளையாடவில்லை. நிச்சயமாக அடுத்த ஆண்டு பலமுடன் திரும்புவோம்.அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.