Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 18.4 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி…. ஜி7 நாடு அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான் மற்றும் தரை வழியாக ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தலைநகர் கியவ், கார்கிவ் போன்ற பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் உக்ரைன் நாட்டிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். இருப்பினும் உக்ரைனு நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தேவையான நிதி உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் 18.4 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குகிறது. மேலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த நிதி வழங்குவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |