தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கலாம். இதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சேலம், கரூர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories