Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மாயம்…. வாலிபருடன் ஓட்டமா?…போலீஸ் விசாரணை….!!!

பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயதுடைய செல்வம். இவருடைய மனைவி 25 வயதுடைய சுதா. இவர்கள் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் செல்வம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான சுதாவை பிரசவத்திற்காக வடதொரசலூரில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு செல்வம் அனுப்பி வைத்துள்ளார். சம்பவத்தன்று துணிவாங்க போவதாக தெரிவித்து விட்டு சென்ற சுதா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதுதொடர்பாக சுதாவின் குடும்பத்தினர் செல்வத்திற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளனர் .இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது மனைவியைத் தேடி பல இடங்களில் அலைந்து உள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |