மேக்வாரி தீவில திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேக்வாரி தீவில் இன்று திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 29.3 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.