தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது போன்ற பிரச்சனைகளால் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இவற்றை தடுக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து துறை தொடர்ந்து கடுமையான சட்டங்களையும் அபராதத்தையும் விதித்து வருகின்றது.
அந்த வகையில் தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட்டை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை உயர்த்தியுள்ளது. 1998 மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி ஹெல்மெட் அணிந்து இருந்து பட்டை சரியாக அணியாமல் இருந்தால் ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும் .உங்கள் ஹெல்மெட்டுக்கு பிஎஸ்ஐ சான்றிதழ் இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். வாகனத்தில் அதிகமாக பாரம் ஏற்றினால் ரூபாய் 20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.