ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது போர் கொடுத்துக் கொண்டிருப்பதை தவறுதலாக ஈராக் போர் என்று தவறுதலாக பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் பேச்சு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்னும் மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டில் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது. அரசியலின் எதிரிகளை சிறை வைக்கிறார்கள் அல்லது தேர்தலில் ஒதுக்குகிறார்கள் என்று தெரிவித்தார்.
Former President George W. Bush: “The decision of one man to launch a wholly unjustified and brutal invasion of Iraq. I mean of Ukraine.” pic.twitter.com/UMwNMwMnmX
— Sahil Kapur (@sahilkapur) May 19, 2022
மேலும், இதன் காரணமாக ஒரு தனிநபர் அதிகாரத்தை பெற்று நியாயம் இல்லாமல் கொடூரமாக ஈராக் நாட்டின் மீது படையெடுப்பு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். இது பார்வையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு தான் தவறாக பேசியதை உணர்ந்த அவர் நான் கூறியது உக்ரைன் நாட்டை, வயது முதிர்வு காரணத்தால் தான் பேசியது தவறாக வந்துவிட்டது என்று தெரிவித்தார். உடனே பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்கினர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.