தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டி இருக்கிறார்.
திருச்சியில் பாஜக பாலக்கரை பகுதி மண்டல செயலாளர் விஜயராகவன் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியைப் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.