Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை”…. போலீசார் விசாரணை…!!!!

சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்த முனுசாமி நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் ஏழு வருடங்களாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இவர் சரியாக வேலைக்கு வராமல் இருந்திருக்கின்றார். இதனால் சென்ற 5-ஆம் தேதி இவருக்கு அலுவலகத்திலிருந்து மெமோ கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்துள்ளார். நற்பகலில் மண்டல அலுவலக மொட்டை மாடிக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவலறிந்து போலீசார் வந்து சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |