இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில கூறி இருப்பதாவது. நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது.
நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் ஆகும். நாங்கள் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டோம். இலங்கையில் ஒரு போதும் இது போன்ற நிலை இருந்தது இல்லை. எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை. நாங்கள் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.