இமானின் முன்னாள் மனைவி டுவிட்டரில் பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மோனிகாவை பாராட்டி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை விமர்சனத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மோனிகா மேலும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் மோனிகாவை பாராட்டி வருகிறார்கள். மேலும் அறிவாளியான முன்னாள் மனைவியுடன் மோதவே கூடாது என்பது இதிலிருந்து தெரிகின்றது என கூறி வருகின்றார்கள்.