மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதால் அன்று வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 30, 31 ஆகிய நாட்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் கத்தோலிக் சிரியன் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஃபெடரல் பேங்க், யூசிஓ பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வங்கி ஊழியர்களின் முக்கியமான கோரிக்கையாக இருப்பது வெளியில் இருந்து ஆட்கள் தற்காலிகமாக எடுத்து அவர்களுக்கு வேலையை கொடுக்கும் பிரச்சனை ஆகும்.
அதாவது வங்கி ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை மூன்றாம் தரப்பினரிடம் கொடுத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலை வாங்குவது, இதனால் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் புதிய வேலை வாய்ப்புகளும் குறைகின்றது. இதையடுத்து வங்கி ஊழியர்களின் மற்றொரு கோரிக்கை சில வங்கிகளில் ஊழியர்கள் கூட்டமைப்பின் குரல் நசுக்கப்படுவது, சில நேரங்களில் தாக்கப்படுவதும் புகார் தெரிவிக்கின்றனர். ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.