சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தற்போது சிறுமிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவமனை சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.