Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 வயதுடைய மூதாட்டி குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலித் தொழிலாளியான முருகன்(47) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மூதாட்டியின் 4 1/2 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து அறிந்த உறவினர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |