மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் முயற்சியில் இடையூறு ஏற்படும் வகையில் தடைகள் வர வாய்ப்பு உள்ளது.
இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
இன்று உங்களுக்கு பணியிட சூழல் சுமுகமாக இருக்காது. பணிகளை ஆற்றும் பொழுது சில தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். இந்த உணர்வை தவிர்த்து உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது நல்லது. உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண வரவு குறைந்து காணப்படும். இன்று உங்களுக்கு அதிகப் பணம் செலவு ஆகும். நிதி சம்மந்தமான எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தராது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போது உங்கள் தாயின் உடல் நலத்திற்காக சிறிது பணம் செலவு செய்ய நேரலாம். இன்று உங்களுக்கு கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது.மாணவ மாணவியருக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்தே காணப்படும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் 8.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.