மத்திய அரசின் சூப்பரான திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக மாதம் ஒரு லட்சம் வரை நம்மால் பென்சன் வாங்க முடியும்.
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கலாம். ஆனால் உங்களது ஓய்வு காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்து நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். இறுதி காலத்தில் உங்களை நீங்களாகவே பார்த்துக் கொள்வதற்கு பென்சன் தொகை உதவியாக இருக்கும். தேசிய சேமிப்பு திட்டம் என்பது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம். இந்த திட்டம் 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அனைவருக்கும் 2009ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
18 முதல் 65 வரை எந்த ஒரு இந்திய குடிமகனும் இதன் மூலம் பயன்பெற முடியும். தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி லாபம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் டையர் ஒன், டையர் 2 என்று என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவுகளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்பு பணத்தை எடுக்கலாம். முதல் பிரிவில் குறைந்தது 500 ரூபாயும், இரண்டாம் பிரிவில் குறைந்தது ஆயிரம் ரூபாயும் செலுத்தி கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் ஐயாயிரம் முதலீடு செய்து வந்தால் உங்களது ஓய்வு காலத்தில் நீங்கள் ஒரு லட்சம் வரை பென்சன் வாங்க முடியும். 25 வயதில் இருந்து இந்த திட்டத்தில் இணைந்தால் இந்த அளவுக்கு பென்ஷன் பெறமுடியும்.