Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு…. திடீரென தேர்வு மையம் மாற்றம்…. வெளியான அவசர அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2a அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வை இன்று நடைபெற உள்ளது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 136 தேர்வு மையங்களில் மொத்தம் 37,366 தேர்வர்கள் இந்தப் போட்டித் தேர்வினை எழுத உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வை இன்று நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்வினை தர்மபுரி மாவட்டத்தில் எழுத உள்ள தேர்வர்களின் அனுமதி சீட்டில் நல்லம்பள்ளி வட்டம், Hall No.039, Govt. Hr. Sec. School, Gooli kottai, Rajakollahalli (P.O), B. Agraharam Viz, Nalampalil Taluk என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக “Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road” என்பதே தேர்வு மையம் ஆகும். எனவே, Hall No.039.-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் ” Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road” என்ற தேர்வு மையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |