ஒவ்வொரு வீட்டிலும் பூச்சிகள் மற்றும் எலி தொல்லை அதிகம் இருக்கும். நாம் எது செய்தாலும் அது ஓடாது. வீட்டில் பல அட்டகாசங்களை செய்து பொருட்களை நாசப்படுத்தும். அவ்வாறு வீட்டில் உள்ள பூச்சிகள் மற்றும் எதிரிகளை விரட்ட எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலுள்ள எலியை விரட்ட, எலிக்கு புதினா வாசனை பிடிக்காது.
எனவே புதினாவை அல்லது புதினா எண்ணெயை எலிகள் வரும் இடங்களில் வைத்தால் அவை வராது. அடுத்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத்தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது தண்ணீரில் கலந்து வைத்தால் கரப்பான் தலை தெறித்து ஓடி விடும். இதனையடுத்து கொசுவுக்கு சிறந்த மருந்து வேப்பிலை. எனவே மாலை வேளையிலோ அல்லது கொசு இருக்கும் இடங்களிலோ காய்ந்த வேப்பிலை வைத்து மூடி வையுங்கள். அதன் பிறகு எப்படி வருகிறார் என்று பார்ப்போம்.